போலி பத்திரங்களை ரத்து செய்ய சட்டத்திருத்தம்!. New Law to prohibit Fraudulent document registration!

Share this & earn $10
Published at : August 17, 2022

போலி ஆவணங்களை பதிவுத்துறையில் நூதனமான முறையில் புகுத்தி மக்களின் நிலங்களை பறிக்கும் செயல், இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் LAND GRABBING ACTIVITY மிகவும் அதிகம், அதுவும் குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அதிகமாக நடந்து வருகிறது.

போலி பத்திரங்களை தயாரித்த குற்றவாளிகள், குற்றத்திற்காக தண்டனை என்பது இல்லாதபோது எந்த வித பயமும் இன்றி மேலும் பல குற்றச் செயல்களை துணிவுடன் செய்தார்கள். .

அதற்கு நிறைய காரணங்கள்…… இருந்தாலும் முக்கியமான காரணங்கள்

1. பத்திரத்துறை அது ஒரு போலியான டாக்குமெண்ட் என்று தெரிந்தாலும், அதை சட்டரீதியாக பதிவு செய்ய மறுக்கும் அதிகாரம், SRO க்கு வழங்கப்படவில்லை, இதனாலேயே, போலியான பத்திரங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன..


2. போலி பத்திரம் என்று பதிவுத்துறை கண்டறிந்த போதும், போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத் துறை RDO & DRO & INSPECTOR GENERAL க்கு சட்டரீதியாக வழங்கப்படவில்லை.

3. பதிவுத் துறையும் போலி டாக்குமென்ட்களை கண்டறிந்து அதை EC யில் குறிப்பிட தவறிவிட்டார்கள், அத்தகைய பதிவுத் துறைய அலட்சியப்போக்கு பதிவுத்துறையில் ஆயிரமாயிரம் போலி பத்திரங்கள் பதிய காரணமாக ஆகிவிட்டன.

போலி பத்திரங்களை வைத்துக் கொண்டு போலியாக பட்டா பெறுவது மற்றும் குண்டர்களை வைத்து இடத்தை பலவந்தமாக பறிப்பது என்று நிறைய அட்டூழியங்கள……..

லட்சக்கணக்கான பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டு,, தன் சொத்துக்களை பாதுகாக்க நீதிமன்றங்களில பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

அப்படி போராடி வரும் மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி, நல்ல செய்தி.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2 2001 அன்று, ரெஜிஸ்ட்ரேஷன் ACT ல் முக்கியமான சில திருத்தங்களை கொண்டு வந்து சட்டம் இயற்றி உள்ளTHU.
சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அந்த சட்டத்தை, மாண்புமிகு தமிழக ஆளுநர் K.N. ரவி அவர்கள் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.

THE REGISTRATION (TAMILNADU SECOND AMENDMENT) ACT, என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்த காணொளியில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

References:

file:///C:/Users/Admin/Documents/Downloads/S_R_M_Packiri_Rajan_vs_The_Inspector_General_Of_on_17_June_2021%20(1).PDF

https://prsindia.org/files/bills_acts/bills_states/tamil-nadu/2021/BILL%20No.%2027%20of%202021%20TN.pdf போலி பத்திரங்களை ரத்து செய்ய சட்டத்திருத்தம்!. New Law to prohibit Fraudulent document registration!
போலிபத்திரங்களைரத்து